தென் மாவட்ட பகுதிகளில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணியால் பல்வேறு முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
திருமங்கலம்-துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருச்சி- திருவனந்தபுரம் இடையேயான திருச்சி சிறப்பு ரயில் மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் மார்ச் 25-ல் சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 26-ல் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 28,29 ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 29,30 ஆகிய நாட்களில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 25 முதல் 29 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையேயான நெல்லை சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 26 முதல் 30 வரை திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ஆகியவை மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 20 முதல் 29 வரை குருவாயூரில் இருந்து புறப்படும் குருவாயூர் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 21 முதல் 30 வரை சென்னையிலிருந்து புறப்படும் சென்னை எழும்பூர் – குருவாயூர் சிறப்பு ரயில் ஆகியவை திருநெல்வேலி – சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை நாகர்கோவில்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில்கள் நாகர்கோவில் – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் புனலூரில் இருந்து புறப்படும் புனலூர் – மதுரை சிறப்பு ரயில் மார்ச் 26 முதல் 29 வரையிலும், மதுரையில் இருந்து புறப்படும் மதுரை – புனலூர் சிறப்பு ரயில் மார்ச் 27 முதல் மார்ச் 30 வரையிலும் திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 29 அன்று மைசூரில் இருந்து புறப்படும் மைசூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 30 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி – மைசூர் சிறப்பு ரயில் ஆகியவை மதுரை – தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மார்ச் 25 முதல் 27 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் மற்றும் மார்ச் 26 முதல் 28 வரை செங்கோட்டையில் இருந்து புறப்படும் செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிலம்பு சிறப்பு ரயில் ஆகியவை மானாமதுரை – செங்கோட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மார்ச் 30 அன்று நாகர்கோவில் மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரம், சோரனூர் கேரள மாநில ரயில் பாதை வழியாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்